×

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாடு புளியோதரை மாநாடு: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி

ஈரோடு: ஆளுநரின் செயல்கள் ஜனநாயக அரசுக்கு எதிராக உள்ளது என்று காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு தேவையில்லாத இடையூறுகள் செய்து வருகிறார். அவரது செயல் ஜனநாயக அரசுக்கு எதிராக உள்ளது. TNPSC தலைவராக சைலேந்திர பாபுவை நியமனம் செய்வதற்கு ஆளுநர் தடையாக இருக்கிறார், ஆளுநர் மீது தமிழக மக்களுக்கு கோபம் இருக்கிறது.

மதுரை மாநாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள் மட்டுமே நடந்துள்ளது, அந்த மாநாட்டை ஒரு புளியோதரை மாநாடாக தான் பார்க்கிறேன் என விமர்சித்தார். இதுபோன்று, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒன்றும் பாதயாத்திரை போகவில்லை, வாகன யாத்திரை தான் சென்றிருக்கிறார் எனவும் விமர்சித்துள்ளார்.

சுங்கச்சாவடிகளில் பணம் வசூலிப்பதில் பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இதேபோல் இறந்தவர்களின் பெயரை பயன்படுத்தி காப்பீடு என்ற பெயரில் பணத்தை எடுத்து இருக்கிறார்கள் எனவும் குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது ஏற்கனவே 7 கிரிமினல் வழக்குகள் உள்ள நிலையில், அவர் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்தது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். காவேரி நதிநீர் பிரச்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவார் எனவும் எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார்.

ஆளுநர் ரவி தமிழ்நாடு அரசுக்கு தேவையில்லாத இடையூறுகள் செய்து வருகிறார். ஆளுநரை மக்கள் விரைவில் ஊரை விட்டு அனுப்பும் சூழல் வரும். சட்டசபையில் என்ன கோப்பு கொடுக்கிறோமோ அதில் கையெழுத்து மட்டும் போட வேண்டியது தான் ஆளுநரின் வேலை. அண்ணாமலையை பொறுத்தவரையில் வாயை திறந்தாலே பொய் தான் சொல்கிறார். அவர் பாதயாத்திரை போகவில்லை, வாகன யாத்திரை தான் செல்கிறார். இந்த பாதயாத்திரை முடிந்த பின்னர் அவர் காணாமல் போய்விடுவார்.

உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது ஏற்கனவே 7 கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவர் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்தது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. காவேரி நதிநீர் பிரச்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டம் நடத்துவார் என எதிர்பார்க்கிறோம். மழை பொழிவு குறைவாக உள்ளதால், தற்போது 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

நீட் தேர்வு காங்கிரஸ் கொண்டு வந்த போது, மாநிலங்கள் வேண்டும் என்றால் அமல்படுத்தி கொள்ளலாம் இல்லை என்றால் நிறுத்தி விடலாம் என்று கூறியது. ஆனால் பாஜக அரசு நீட் தேர்வை கட்டாயமாக அமல்படுத்துகிறது என்பதை தெரிந்து கொண்டு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசி இருக்க வேண்டும்.

மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாடு என்பது 15 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறுகின்றனர். ஆனால் 50 ஆயிரம் பேர் தான் கலந்து கொண்டனர். அங்கு கலை நிகழ்ச்சிகள் மட்டுமே நடந்துள்ளன. 5 மணி நேரம் கூட நடைபெறவில்லை. இது ஒரு புளியோதரை மாநாடாக பார்க்கிறேன் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி அளித்துள்ளார்.

 

The post மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாடு புளியோதரை மாநாடு: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Indirect Rise Conference in ,Madurai, Pleyodarai Conference ,K.K. S Ilangovan ,Erode ,Congress ,MLA ,EPA ,CV ,K.K. S. Ilangovan ,Madurai Bleyodarya Conference ,K.K. ,Ilangovan ,Dinakaran ,
× RELATED மாநிலங்களவை தேர்தல் வேட்புமனு...